​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
"சுவாச மண்டலத்தை பாதிக்கும் புதிய பாக்டீரியா".. சர்வதேச விண்வெளி மையத்திலுள்ள வீரர்களுக்குப் புதிய சிக்கல்..

Published : Jun 11, 2024 4:21 PM

"சுவாச மண்டலத்தை பாதிக்கும் புதிய பாக்டீரியா".. சர்வதேச விண்வெளி மையத்திலுள்ள வீரர்களுக்குப் புதிய சிக்கல்..

Jun 11, 2024 4:21 PM

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட 9 விண்வெளி வீரர்களும் தங்கியுள்ள சர்வதேச விண்வெளி மையத்தில் சுவாச மண்டலத்தை பாதிக்கும் பாக்டீரியா கண்டறியப்பட்டுள்ளது.

ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் அண்மையில் புட்ச் வில்மோருடன் சேர்ந்து சுனிதா சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்றிருந்தார். அந்த மையத்தில் மருந்துகளுக்கு பலன் அளிக்காத எண்ட்ரோ- பாக்டர் புகன்டென்சிஸ் எனப்படும் பாக்ட்ரீயா கண்டறியப்பட்டுள்ளது..

பூமியில் இருந்து சென்றிருக்கக் கூடும் என்று கருதப்படும் அந்த பாக்டீரியா, யார் மூலம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்றது என்பது தெரியவில்லை.

ஆனால், காற்று புக முடியாத அளவுக்கு எல்லா பக்கமும் மூடப்பட்ட விண்வெளி மையத்தில் மிகவும் வீரியத்துடன் செயல்படக் கூடிய அந்த பாக்டீரியாவால் அங்குள்ள வீரர்களின் ஆரோக்கியத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படக் கூடும் என அஞ்சப்படுகிறது.